திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல்போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
மேலும் காணாமல் போன செல்போன்கள் பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில், கண்டோன்மெண்ட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 69 செல்போன்களும், காந்திமார்க்கெட் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 23 செல்போன்களும், தில்லைநகர் சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 21 செல்போன்களும், கே.கே.நகர் சரக காவல்நிலைய எல்லையில் 11 செல்போன்களும், பொன்மலை சரக காவல்நிலைய எல்லையில் தொலைந்து போன 11 செல்போன்களும், ஸ்ரீரங்கம் சரக காவல் நிலைய எல்லையில் தொலைந்து போன 10 செல்போன்களும், மாநகர சைபர் கிரைம் செல்லில் பெறப்பட்ட புகாரில் 3 செல்போன்கள் உட்பட 25 லட்சம் மதிப்புள்ள பல்வேறு கம்பெனிகளின் 153 ஆன்டிராய்டு செல்போன்கள் கண்டுபிடித்து மீட்க்கபட்டுள்ளது.
மேற்படி மீட்கப்பட்ட 153 செல்போன்களில் 127 செல்போன்களை 31.01.2024-ந்தேதி திருச்சி மாநகரம் கேகேநகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் அதன் உரிமையாளர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
மேற்படி செல்போன்களை திரும்ப பெற்றுக்கொண்ட அதன் உரிமையாளர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் செல்போனை கண்டுபிடித்து தந்ததற்கு மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும், மாநகர காவல்துறைக்கும் தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.