தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ் இயங்கும் காவலர் பற்றாக்குறையால் மக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையம்.
திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுமார் 30 கிராமங்களை சேர்ந்த 15000 மேற்பட்ட மக்களுக்கு தற்போது திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் மூன்றே மூன்று காவலர்கள் தான் பணியாற்றுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஆனால் இதுதான் நிதர்சனம். இருக்கும் நபர்களும் பந்தோபஸ்து என்று சென்றுவிடும் நிலையில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்படும் பொது மக்களுக்கு பதில் சொல்வதற்கு ஒரே ஒரு காவலர் மட்டும் பணியில் காவல் நிலையத்தில் இருக்கும் நிலையில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதை தடுக்க முடியாத தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. பேராவூரணி காவல் நிலையத்தின் நிலைமையும் கிட்டத்தட்ட இதுதான்.
இது தொடர்பாக நீதியின் நுண்ணறிவு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூர் காவல்துறை துணை தலைவராக திருமதி.கயல்விழி பதவி வகித்த போது அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை துணை தலைவர் அவர்களும் மனுவை ஏற்றுக் கொண்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்வதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் பணி மாறுதலாக சென்று விட்ட நிலையில் தற்போது இந்த காவல் நிலையங்களில் கட்டாயமாக கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது உள்ள காவல் துறை துணை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆள் பற்றாக்குறையான காவல் நிலையங்களுக்கு தேவையான காவல் ஆளினர்களை நியமனம் செய்ய ஆவண செய்வார் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.