மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை மாநகர் , திருநெல்வேலி மாநகர்,தென் மண்டல காவல்துறை மற்றும் எம். எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை &ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய தமிழக காவல்துறைக்கான “மகிழ்ச்சி” எனும் திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை இயக்குநர்
திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
விழாவில் காவல்துறை தலைவர் (நல்வாழ்வு) திரு.நஜ்மல் ஹோடா இ.கா.ப., மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் மதுரை,திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் மதுரை ,தேனி திண்டுக்கல்,விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை & ஆராய்ச்சி மைய மனநல மருத்துவர் செ.இராமசுப்பிரமணியன் மற்றும் தேசிய மனநல ஆலோசகர் முனைவர் சேகர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு காவலர்களின் மனநலம் பேணுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.
விழாவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அவர்கள் காவலர்களுக்கான ஒருங்கிணைந்த விடுப்பு செயலி (CL APP) யை அறிமுகம் செய்தும் காவலர்களுக்கு கைபேசிகளை வழங்கியும்,மனநலம் பற்றிய விழிப்புணர்வு கையேடுகளையும் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் அஹானா மருத்துவமனை,திரிசூல் மறுவாழ்வு பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்ற காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்