சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜெயா தலைமையில் காட்டுச்சேரி பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் கடத்தி வந்த நபரை கைது செய்து 55 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். காவல் ஆய்வாளர் ஜெயா தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது