தென்காசி காவல் நிலைய எல்கைகுட்பட்ட தென்காசி சொர்ணபுரம் மேட்டு தெருவில் வசித்து வரும் சதாம் உசேன் என்பவரின் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த மொத்தம் 21 கிராம் எடையுள்ள தங்க நகைகளை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறு தென்காசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், தென்காசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த திவான் ஒலி என்பவரது மனைவி ஜமிமா பானு என்பவர் சதாம் உசேன் வீட்டில் நகைகளை திருடி தென்காசி மேலே ஆவணி மூல வீதியில் கடையில் அடகு வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் மேற்படி திவான் ஒலி(35) மற்றும் அவரது மனைவி ஜமீமா பானு(33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து திவான் ஒலியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட 11 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது..