மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு இன்று 06.04.24ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திரு.லாமெக், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் திரு.அறிவழகன், உதவி ஆய்வாளர், தனிப்படை மற்றும் காவலர்கள் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் 4 கிலோ கஞ்சா போதை பொருளை எடுத்து வந்த சீனிவாசன் (46) த/பெ. கோவிந்தராஜன், வள்ளுவர் நகர், காரைக்குடி என்பவரை கைது செய்தும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மேலும் இதில் தொடர்புடைய 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மேலும் 4 கிலோ கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டது, எதிரிகளை நீதிமன்ற அடைப்பு காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கஞ்சா போதைப்பொருள் விற்பனை, கடத்துதல், வைத்திருத்தல் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் பொதுமக்கள் 8438456100 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.