சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர் பகுதியில் பத்மாவதி, என்பவர் வசித்து வருகிறார். பத்மாவதி கடந்த 08.04.2024 அன்று மெடிக்கல் ஷாப்புக்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம். கணேஷ்நகர் 1வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மேற்படி பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 2 தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து பத்மாவதி S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து, மேற்படி தங்கச்சங்கிலி பறிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அமோல், வ/32, த/பெ.பாலசாகிப் ஷிண்டே, யஸ்வந்த் நகர், பர்பானி, மகராஷ்டிரா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அமோல் தனது சொந்த மாநிலாமான மகராஷ்டிராவிலிருந்து சென்னைக்கு வந்து விடுதிகளில் தங்கியிருந்து, இருசக்கர வாகனங்ககளை திருடிய பின்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
மேலும் இவர் மீது ஏற்கனவே சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 2019ம் ஆண்டு K-4 அண்ணாநகர் காவல் நிலையத்திலும், 2020 ஆண்டு V-5 திருமங்கலம். K-4 அண்ணாநகர் காவல் நிலையங்களிலும், 2021 ம் ஆண்டு J-4 கோட்டூர்புரம், J-1 சைதாப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களிலும் மொத்தம் 10 செயின் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அமோல் மீது கேரளா, கர்நாடகா-பெங்களூரு, தெலுங்கானா- ஹைதரபாத், மகாராஷ்டிரா மும்பை ஆகிய மாநிலங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.