திருநெல்வேலி பெருமாள்புரம் NGO காலனியை சேர்ந்த பானுமதி (40) என்பவர் சேலம் மாவட்டம் அய்யன்பெருமாள்பட்டியை சேர்ந்த நித்தியானந்தம் (47) என்பவரிடம் கடந்த 3 மாதங்களாக முகநூல் (Facebook) மூலம் பழகி அவரிடம் ஆசை வார்த்தை கூறி தனது இல்லத்திற்கு வரவழைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி, சுமார் 2 1/2 சவரன் தங்க செயின், 1 சவரன் தங்க மோதிரம், ATM card, Credit Card ஆகியவற்றையும் மொபைல் வங்கி செயலி மூலம் ரூ.75,000/- பணம் மற்றும் ATM மூலம் ரூ.60,000/- பணம் ஆகியவற்றையும் வங்கி காசோலையில் கையொப்பம் பெற்று ரூ.10 லட்சம் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டதாக அவரிடம் வேலை செய்யும் நபரின் உதவியுடன் 30-04-2024ஆம் தேதி காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அருணாச்சலம் மற்றும் காவல் துறையினர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையால் கடத்தப்பட்ட நபர் 30 நிமிடங்களுக்குள் மீட்கப்பட்டதோடு, ஆள்கடத்தலில் ஈடுபட்ட எதிரிகளான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளதுரை(42), பார்த்தசாரதி(46), சுடலை(40), ரஞ்சித்(42) மற்றும் பெருமாள்புரத்தை சேர்ந்த பானுமதி(40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் விரைவாக செயல்பட்டு கடத்தபட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்டு எதிரிகளை கைது செய்த காவல்துறையினரையும், தகவல்களை விரைவாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற மாநகர காவல் கட்டுபாட்டு அறையில் பணிபுரியும் காவல் ஆளினர்களையும், மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்கள் 01-05-2024ஆம் தேதி நேரில் அழைத்து அவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.