கடந்த சில நாட்களாக தமிழக காவல்துறையின் ஒட்டுமொத்த காவலர்களின் மனங்களில் இடம் பெற்ற கதாநாயகன் இவரே. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS ஆவார். இவர் செய்த செயல் தற்சமயம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான பீடத்தில் தியானம் மேற்கொள்ள வந்துள்ள மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் பாதுகாப்பு பணியில் உள்ள ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினருக்கும் மூன்று வேளை உணவும் சிறப்பாக ஏற்பாடு செய்து அந்த உணவையும் அமரவைத்து அனைவரையும் சாப்பிடவும் வைத்துள்ளார். இது தமிழக காவல்துறையினர் வெளி மாவட்டங்களுக்கு பாதுகாப்பு அலுவலுக்காக செல்லும் காவலர்களின் பணி வரலாற்றில் இது ஒரு மாபெரும் புரட்சியாக கருதப்படுகிறது. இவர் செய்த இந்த மிகப்பெரிய புண்ணிய செயலை காவல்துறையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் என்பதில் ஐயமில்லை.