தமிழக காவல்துறையில் 39 வருடங்கள் சிறப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்வேல் அவர்கள் மற்றும் 39 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெறும் முன்னீர்பள்ளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்கள் மற்றும் 38 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெறும் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துப்பாண்டி அவர்கள் மற்றும் 36 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெறும் பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு (IUCAW) சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ஆல்பிரட் வின்சென்ட் ஜெயராஜ் அவர்கள் ஆகிய நான்கு பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் பொன்னாடை அணிவித்தும், பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.