சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டலத்தில் கூடுதல் ஆணையாளர் தெற்கு அவர்களின் தலைமையின் கீழ் தீவிர குற்றவாளிகள் தடுப்பு பிரிவு, தெறகு (Series Crime Sqund-South) இயங்கி வருகிறது. மேற்படி SCS பிரிவின் முக்கிய வேலையானது கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் A மற்றும் A+ சரித்திரப் பதிவேடு கொடுங்குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து குற்றம் நடவாமல் தடுப்பதும் ஆகும்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், காவல் இணை ஆணையாளர் (தெற்கு மண்டலம்) திரு.M.R.சிபி சக்கரவர்த்தி இ.கா.ப., அவர்களின் நேரடி கண்காணிப்பபிலும், SCS தெற்கு, பிரிவு காவல் ஆய்வாளர் திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் தலைமையிலான காவலர்கள் கடந்த 24.10.2012 ம் தேதி அடையாறு காவல் மாவட்டம் J-3 கிண்டி காவல் நிலைய எல்லையில், ஏழுமலை, வயது/72 என்பவரை கொலை செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் குற்றவாளியின் பெயர் சிவக்குமார். வயது/45/2024, த/பெ.சின்னசாமி, எண்.160 ‘சி’ குப்பனூர் கிராமம். கோயம்புத்தார் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. மேலும் கேரளா மாநிலம் ஒட்டபாலம் காவல் நிலைய சரகத்தில், சிவகுமார் கடந்த 2004 ம் ஆண்டில் நாகராஜ் என்பரை ஆதாயத்திற்காக கொலை செய்து அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்ததற்காக ஒட்டபாலம் காவல் நிலைய ஆதாயக் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவராவார்.
கேரளா மாநிலம் ஒட்டபாலம் வழக்கில் நீதிமன்ற விசாரணை முடித்து 08.11.2019 ம் தேதி ஓட்டபாலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் மேற்கண்ட குற்றவாளி சிவக்குமார் (எ) செந்தில், வ/45/2024, த/பெ.சின்னசாமி என்பவருக்கு ஆயும் தண்டனை விதிக்கப்பட்டு கண்ணுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் 03.06.2020 பரோலில் சென்று சிவகுமார் தலைமறைவானார். J-3 கிண்டி காவல் நிலைய மேற்படி ஆதாய கொலை வழக்கின் நீதிமன்ற விசாரனைக்கு ஆஜராகாமல் இருத்தமையால் மேற்கண்ட குற்றவாளி சிவகமார் மீது நீதிமன்ற பிடியாணை (NBW) பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து தேடியும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், சிவகுமார் பிரகடனபடுத்தப்பட்ட குற்றவாளியாக அரசிதழில் அறிவிக்கப்பட்டார்.