போதைக்கான சட்டவிரோத பயன்பாட்டை ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, 01.12.2024 அன்று தொண்டாமுத்தூர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட மல்லிகை நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசாரின் சோதனையில், கஞ்சா விற்பனை செய்ய விரும்பிய இரண்டு நபர்களை கைது செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்ஷய குமார் நாயக் மகன் பசந்தகுமார் நாயக் (32) மற்றும் அபய நாயக் மகன் ஹேமந்த் நாயக் (28) என்ற இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையை முன்னெடுத்த காவல் கண்காணிப்பாளர், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் அதனை பரப்பும் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் எவரும் காவல்துறைக்கு அளிக்கலாம். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண்: 77081-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும். தகவல்களை அளிக்கும் பொது அவர்களின் தனித்துவமான விவரங்கள் காப்பாற்றப்படும்.