தஞ்சையில் புதிய எஸ்.பி பதவியேற்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர்.ராஜாராம் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் (ஜன.4) சனிக்கிழமை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆர்.ராஜாராம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யார் இவர்?
கடந்த அதிமுக ஆட்சியில் சிலை கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பி. ஏடிஎஸ்பியாக பணியாற்றியவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் டிஎஸ்பியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் அதிமுக பிரமுகர்கள் (தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும்) பாண்டியன், மற்றும் அதிமுக நிர்வாகி சுந்தர் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்தவர். நேர்மையானவர் என காவல் துறையினரால் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது