திருச்சி மாவட்டம், இருங்களுர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி விடுதியில் நுழைந்த 10 பேர் கொண்ட குழுவினர் அங்கு தங்கியிருந்த மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 13 செல்போன்கள் மற்றும் ரூபாய் 2300 பணத்தை பறித்து சென்றது தொடர்பாக அந்த நபர்களை உடனடியாக பிடிக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட 4 சிறார்கள் உட்பட 9 பேரை தனிப்படையினர் கைது செய்து 4 சிறார்களை இளஞ்சிறார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்ததுடன் 5 எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், திருடப்பட்ட செல்போன்கள் மற்றும் பணத்தை மீட்டதுடன் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
