தனியாக வசிக்கும் முதியோர்களுக்காக, காவல் துறையினர் “காவல்” செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த செயலியில் பதிவு செய்தவர்கள், ஆபத்து நேரத்தில் தங்கள் மொபைலை மூன்று முறை அசைத்தாலே, போலீசாருக்கு உடனடி எச்சரிக்கை செல்லும் என காவல் ஆணையர் சரவணசுந்தர் இ.கா.ப., தெரிவித்துள்ளார் தனியாக உள்ளோரின் வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.
