ஈரோடு தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தினேஷ் குமார், கடந்த 2024 டிசம்பர் மாதம் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற காவல் (State police Duty meet) போட்டியில் அறிவியல் ரீதியான குற்ற புலனாய்வு பிரிவில் வெண்கல பதக்கம் வென்றதற்காக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., பரிசு வழங்கினார். பரிசு பெற்று ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த உதவி ஆய்வாளர் தினேஷ் குமாரை நேரில் அழைத்து பாராட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
