கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் தலைமையிலும், நேரடி மேற்பார்வையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வரிசையில், 29.06.2025, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுகந்த் (23) என்பவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டும், மேற்படி நபர் கைது செய்யப்பட்டும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் விற்பனைக்கோ, சட்ட ஒழுங்குக்கு எதிரான செயல்களுக்கோ தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தயங்காமல் தெரிவிக்கலாம்.
தகவல் வழங்க: கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212
வாட்ஸ்அப் எண்: 77081-00100
தகவல் வழங்கும் நபர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாக வைக்கப்படும்.
