மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் போலீசார் பாராட்டு.
குமரி மாவட்டத்திலும் காவல் நிலையங்களில் முறையாக வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
இதை அமல்படுத்தும் வகையில் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக குமரி மாவட்டத்தில் போலீசாரின் வார விடுமுறையை கண்காணிக்கும் வகையில் தனி செயலி தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது .
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த செயலியை துவக்கி வைத்தார் வைத்தார்.
இனி போலீசார் இந்த அப் மூலமாக விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் போலீசார் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் இது உதவும் எனவும் பேட்டி அளித்துள்ளார்.

