கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய சரகம் ரெஜினா நகர் பகுதியில் உள்ள பூட்டிய வீட்டை உடைத்து பீரோவில் உள்ள நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தது.


இது சம்பந்தமாக தஞ்சாவூர் நகர மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க,
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் TPS உத்தரவின் படி, தஞ்சாவூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்சோமசுந்தரம் அவர்கள் மேற்பார்வையில் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில், தலைமை காவலர் கோதண்டபாணி திருக்குமரன் முதல்நிலை காவலர்கள் அருண்மொழி வர்மன், இரண்டாம் நிலை காவலர்கள் இஸ்மாயில் விஜயசந்திரன் மற்றும் AR PC அறிவழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில்,
குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பல கொலைகள் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்ட ரவுடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட A+ HS ROWDY



1: சுகுமார் 28/25 s/o. சண்முகம், வைரவன் பட்டி பெரியகோட்டை po சிவகங்கை மாவட்டம்
- அமர்@அமர்நாத் 24/25 s/o. செல்வராஜ், குலைக் கால்தெரு மஜித் ரோடு சிவகங்கை மாவட்டம்.
- குட்ட சங்கர் @ சங்கர் 25/25, பூமிநாதன், செக்கடி தெரு, மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டம்.
என்பதை அறிந்து கோயமுத்தூரில் சொகுசு விடுதியில் சொகுசாக தங்கி இருந்த குற்றவாளியை கைது செய்து களவு சொத்துக்களை மீட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.
எதிரியை பிடிக்க உதவிய சைபர் கிரைம் இரண்டாம் நிலை காவலர் திரு. பிரகதீஸ்வரன் மற்றும் திரு. ஜோஸ்வா ஆகிய இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள், குற்றவாளிகளை பிடிக்க உதவிய திருச்சி தலைமை காவலர் ஹரிஹரன் ஈரோடு மாவட்டம் தலைமை காவலர் சிலார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
