தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நடுவிக்கோட்டை இந்திராநகரைச் சேர்ந்தவர் எம்.சுலோஜனா வயது 65. இவர் சகோதரி வீட்டுக்குச் சென்று திரும்பிய போது பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கத்திலிருந்து புனல்வாசல் வழியாக செல்லும் 6A பேருந்தில் ஏறி தனது வீட்டிற்கு பயணம் செய்கிறார். அப்போது பேருந்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இவரை பேருந்தின் உள்ளே செல் என்று முதுகில் கைவைத்து தள்ளுகிறார். அவர் பேருந்தின் உள்ளே சென்ற பிறகு கழுத்திலிருந்த 5 பவுன் கொண்ட தாலி செயின் காணாமல் போனதையறிந்து பதட்டத்தில் பேருந்தில் இருந்து இறங்கி உள்ளார்.


டிஎஸ்பி
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தால் புகாரை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்துள்ளனர். இதனால் வழக்கறிஞர் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இதுவரை எந்த விசாரணையும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட வில்லை. இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பட்டுக்கோட்டை நகர காவல்துறையின் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பட்டுக்கோட்டை துணை காவல்கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
