தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்களை புகாரின் அடிப்படையில் துரிதமாக கண்டுபிடித்து தரும் அதிராம்பட்டினம் காவல்துறை அதிகாரிகள்.
அதிரை காவல் ஆய்வாளர் முருகேசன் உத்தரவின் பேரிலும் உதவி ஆய்வாளர் மஹாராஜா மேற்பார்வையிலும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த காவலர் பிலால் அவர்களின் சீரிய முயற்சிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தவர்கள் செல்போனை திரும்ப பெற்றுக்கொண்டனர். திரும்ப பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் அதிரை காவல்துறை அதிகாரிகளின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
