காவல்துறையில் ஊடகங்களை சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு அதிகாரி என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகத் தொடர்பு அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம்.
காவல்துறையில் புதிதாக ஊடக செய்தி தொடர்பு அதிகாரி என்று தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பதவியால் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? தமிழகம் முழுவதுமுள்ள செய்தியாளர்கள் அப்பகுதி காவல் நிலையங்களுக்கு சென்று செய்தி சேகரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதா? அதிகாரியின் பணி குறித்த விளக்கத்தை காவல்துறை தலைவர் அலுவலகம் சார்பில் வெளியிடப்படுமா?
