26.10.2025 இரவு லீபஜார் பாலத்தின் கீழ் பாஷா (58), த/பெ அப்துல் சுகூர், ரெட்டிப்பட்டி, சேலம் அவர்கள், தனது மனைவி பர்வீன் இருவரும் வீட்டிற்கு செல்லும்போது, ஒரு லேடீஸ் ஹேன்ட் பேக் கிடப்பதை எடுத்து பார்க்க அதில் ஒரு தங்க தாலி கொடி, ஒரு ஆரம், ஒரு பர்ஸ், ATM கார்டு மற்றும் PAN கார்டு இருந்துள்ளது. எனவே அந்த பையை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 27.10.2025 காலை, அவரது மகன் ஆட்டோ ஓட்டுநர் அப்துல்லா மூலம், பையை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா இ.கா.ப., (தெற்கு) அவர்களிடம் ஒப்படைத்தனர்.
காவல் துணை ஆணையாளர் அவர்கள், அந்த நகைகளை உரியவர்களான செவ்வாய்பேட்டையை சேர்ந்த பூங்கோதை என்பவரிடம் ஒப்படைத்ததுடன், பாஷா, அவரது மனைவி பர்வீன், மற்றும் அப்துல்லா ஆகியோரின் நேர்மை, நற்பண்பு, சமூகப்பொறுப்புணர்வை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இத்தகைய நேர்மையான குடிமக்கள் சமூகத்தின் பெருமையாக திகழ்கிறார்கள்.
நேர்மையே மனிதனின் உண்மையான நகை!
