தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் CCTNS என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது. மேற்படி இந்த இணையதள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் CCTNS இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான காவல்துறையினரை தமிழக காவல்துறை சார்பாக பாராட்டுகிறோம்.