புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள் சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பெரும்பாலான புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து (Mass Grievance Redressal Program) சிறப்பு மனு முகாம் (பெட்டிசன் மேளா) நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் செயல் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை நண்பனாகவும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.