காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்தல், சாலையோரங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டல் மற்றும் அவர்களது நல்வாழ்விற்கும் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யும் பொருட்டு Operation Smile என்ற திட்டமானது திருச்சி மாநகரில் 01.02.2021 முதல் 15.02.2021 வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழாவானது 01.02.21-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப. அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. இத்திட்டக் குழுவில் சமூக பாதுகாப்புத்துறை, தொழிலாளர் துறை, குழந்தைகள் நல வாழ்வு குழு மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அனைத்து காவல் நிலைய குழந்தை நல காவலர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் அவர்களது மறுவாழ்விற்கு தேவையானவற்றைப் பற்றி கலந்தய்வு செய்யப்பட்டது.