தென்னிந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவின் SABRE -APAC AWARD திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயாவுக்கு வழங்கப்பட்டது.
இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவருக்கு SABRE -APAC AWARD திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
கேடயம் என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகம் உருவாக்கி கொண்டிருப்பதற்காக, அமெரிக்காவை சேர்ந்த ஹெஸ்டர் செசிலியா, இயக்குநர், SABRE – விருதினை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் Z.ஆனி விஜயா அவர்களுககு வழங்கினார்.
உடன் பிரதாப் செல்வம், SABRE APAC &CEO frutunes, தேவ சித்தம் IJM துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.