அசத்தும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்….
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் காணாமல் போன குழந்தைகள் (Girl Missing and Boy Missing Case ) தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 71 குழந்தைகளில், காணாமல் போன 64 குழந்தைகள் (ஆண் குழந்தைகள் -10, பெண் குழந்தைகள் 54) கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஆலங்குடி, வம்பன் காலணியைச் சேர்ந்த குமாரவேலு என்பவரை நாகாலாந்திலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அதேபோல் 01.02.2021 முதல் 15.02.2021 வரை காணமல் போனவர்களை சிறப்பு முகாம் மற்றும் அதனை முன்னெடுக்கும் வகையில் “புன்னகையை தேடி“ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக. பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்தும், அதற்காக ஏற்படுத்தப்பட்ட காவல் வாகனத்தை 02.02.2021 ஆம் தேதியன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தினை ஒருங்கிணைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அதிகாரிகளும் இதற்கென தனியாக காவல் வாகனம் மூலம் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி.G.கீதா, திருமதி.J.ஜெரினாபேகம், திரு.B.இராஜேந்திரன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழுமத் தலைவர் திருமதி.ஸ்டெல்லா முத்துசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி திருமதி.குணசீலி ஆகியோர் கலந்து கொண்டனர்.