காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் IPS., இணைஆணையாளர் A.G.பாபு IPS., ஆணைக்கிணங்க “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD – DRIVE AGAINST DRUGS)” தொடர்ச்சியாக, துணை ஆணையர் பிரபாகர் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் சபரிநாதன் மேற்பார்வையில், S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், 25.01.2021 அன்று மாலை, கீழ்க்கட்டளை, அன்பு நகர், கனகதுர்க்கை அம்மன் கோயில் எதிரில் கண்காணித்தபோது, அங்கு இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனை செய்த ராமச்சந்திரன், கௌதம், ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன், மடிப்பாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளதும், ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.