மாநில அளவில் நடந்த சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் ரகப்பிரிவில் அன்னவாசல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.விஜயாலயன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. சுந்தரலிங்கம் வெவ்வேறு போட்டியில் வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் வென்றார்கள்.
மேலும் மெச்சத்தகுந்த பணிக்காக அண்ணா பதக்கம் வாங்கிய திருக்கோகர்ணம், அறந்தாங்கி காவல்நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.முருகானந்தம், திரு.சுப்ரமணியன் ஆகியோர்களை சிறப்பிக்கும் வகையில் 01.03.2021 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக பாராட்டி தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.