சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை 16 .4 .2021 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.