சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.குமார், என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் 26.4.2021 அன்று இரவு சிகிச்சை பலனின்றி திரு.குமார் இறந்தார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், மோனிகா (மகள்) மற்றும் டென்சல் (மகன்) உள்ளனர்.
இறந்த உதவி ஆய்வாளர் திரு. குமாருக்கு 28.04.2021 அன்று மாலை T-4 மதுரவாயல் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் ,இ.கா.ப., அவர்கள் மறைந்த உதவி ஆய்வாளர் திரு.P.குமார் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் திரு.குமார் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மறைந்த உதவி ஆய்வாளர் திரு.குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்வில், கூடுதல் ஆணையாளர்கள் திரு.T.செந்தில் குமார், இ.கா.ப, (வடக்கு), திருமதி.K.பவானீஸ்வரி, இ.கா.ப (போக்குவரத்து), இணை ஆணையர்கள் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப (மேற்கு மண்டலம்), திரு.K.எழிலரசன், இ.கா.ப, (போக்குவரத்து/வடக்கு), திருமதி.பி.கே.செந்தில்குமாரி, இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு), துணை ஆணையர்கள் திரு.G.ஜவஹர், இ.கா.ப, (அண்ணாநகர்), திரு.ராஜேஷ் கண்ணா,இ.கா.ப, (புளியந்தோப்பு), மருத்துவர் M.துரை,இ.கா.ப., (போக்குவரத்து/ வடக்கு), திரு.M.M.அசோக் குமார் (போக்குவரத்து/ மேற்கு), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.