தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார்.
முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.
இந்த நிலையில், 5-ந்தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை.
இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல், குளங்கள், அரசியல் கூட்டங்களுகு தடை நீடிக்கிறது.