திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்களின் வழிக்காட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஜெரீனாபேகம் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அவர்கள் தலைமையில் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி ரஷ்யா சுரேஷ், தலைமைக்காவலர் பாலாஜி, முதல்நிலைக்காவலர் பிரபு ஆகிய காவல்துறையினர் மற்றும் டாக்டர். கார்த்திக்தெய்வநாயகம் அவர்களின் குழு, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் கதிர்வேல் மற்றும் அவரது குழு அடங்கிய தனிக் குழுவினர் 01.07.2021 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோரத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றிக் கொண்டிருந்த இரு பெண்களை கண்டறிந்து அவர்களை மீட்டு புதுக்கோட்டை உள்ள பழைய அரசு மருத்துவமனையில் உள்ள மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்தில் சேர்த்து விட்டனர்.