பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பாடி சிவன் கோவில் அருகில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக் தலைமையில் 13.06.2021 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர், சுண்டல், மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சரவணன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுருளிராஜன், அதிமுக பிரமுகர் லி.ழி.சரவணன், திமுக பிரமுகர் மணிகண்டன், கொரட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன், பேனா முள் நிறுவனர் சோபனா கார்த்திக் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், மக்கள் விருப்பம் ஆசிரியர் தருமராஜா, நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், அரசியல் ஆசிரியர், முத்திரை செல்வம், தேனை பார்வை ஆசிரியர் சரண், சமூக ஆர்வலர் காசிமாயன், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், ஆர்வலர் முனைவர் அயன்புரம் பாபு, ரிப்போட்டர் டுடே ஆசிரியர் சிவகுமார், அதிரடி தீர்ப்பு சீனிவாசன், வணக்கம் தமிழகம் பாலாஜி, மண்ணின் குரல் ஆசிரியர் சரவணன், சமுக ஆர்வலர் அல்லாபகேஷ், திராவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, சமூக ஆர்வலர் சபரி மோகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்,
பேனாமுள் சரவணன், பா.ஜெகதீஸ், அன்பு, கதிர்வேல், ஞானராஜ், அஸ்லாம், கார்த்தி உள்ளிட்ட பேனா முள் நிருபர்கள் நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இவ்விழாவில் அம்பத்தூர் மயான ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என 100க்கு மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.