தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு British Standards Institutionனால் வழங்கப்பட்ட ISO 27001:2013 சர்வதேச தரச்சான்றினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சைபர் கிரைம்) அமரேஷ் புஜாரி, இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்ப சேவை) வினித் தேவ் வான்கடே, இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவை) எஸ். மல்லிகா, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.