தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி பாரதியார் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளர் தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.V.S.இராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு மகாகவி பாரதியார் குறித்து புகழுரை ஆற்றினார். மேலும் பத்திரிகையாளர்களின் சமூக பங்களிப்பு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினார்.
அனிச்ச மலர் ஆசிரியர் கலைஞானி சேகர், மெட்ரோ மேன் ஆசிரியர் அன்பு, அமுதம் ரிப்போர்டர் ஆசிரியர் வாஞ்சிநாதன், ரிப்போர்டர் டுடே ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் நமது நகரம் ஆசிரியர் எஸ்.சரவணன், பீப்பிள் டுடே ஆசிரியர் சத்யநாராயணன், சட்ட கேடயம் ஆசிரியர் ராஜன், நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் சிவகுமார், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, தர்ம ராஜ்யம் வினோத், மாலை தீபம் ஆசிரியர் முகுந்தன், விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், கடல் சிற்பி ஆசிரியர் முத்து, ராஜ கர்ஜனை ஆசிரியர் இளஞ்செழியன், தேனை பார்வை ஆசிரியர் சரண், கடல் அலை ஆசிரியர் முரளி, மின்னொலி ஆசிரியர் வீரா, பல்லவன் முரசு ஆசிரியர் மஞ்சுநாதன், ஜீவானந்தம் ஆசிரியர் சிந்தனை ஒளி, திராவிட உதயம் ஆசிரியர் செந்தமிழ் செல்வி, பல்லவன் முரசு மகேஷ் நாகராஜன், நமது நகரம் புகழேந்தி, பேனா முள் நிருபர் ஞான்ராஜ், நீதியின் நுண்ணறிவு நிருபர்கள் சாம்சங் செல்வகுமார், கணேச பாண்டி, சண்முகம், விஜய், தேவராஜ், ஜேம்ஸ், ரவிக்குமார், மோகன், சுப்பிரமணியம், ஜோயல், சுபாஷ், சிவகுமார், மோகன்,மாதவன், விஜய், அருண்குமார், சிவராஜ், ஆரம்பம் நிருபர்கள் செந்தில் குமார், முரளி கிருஷ்ணன், நீதியின் தீர்ப்பு நிருபர்கள் ஷபி பாபு, அபிராமி, ஜீவா, கிரிதரன், மோகன், முரளி, அதிபதி பாண்டியன், எத்திராஜ், மண்ணின் குரல் நிருபர்கள் டாக்டர் ஜெயராமன், முத்துலட்சுமி, நமது நகரம் நிருபர்கள் அருணாசலம், பால சுப்ரமணியன், வாக்காளர் மனசு ஞானசேகர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு மகாகவி பாரதியாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.