தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டிற்கான பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு தற்போது வெளியிட்டுள்ளார்.இதில் சென்னை மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை பெருநகர காவல் நிலையங்கள் மற்றும், மாநகர காவல் நிலையங்களுக்கும் தனித்தனியாகப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை மாநகர காவல் நிலையங்களைப் பொறுத்தவரை, பி1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. பி1 புளியந்தோப்பு காவல் நிலையம், ஜே1 கண்ணகி நகர் காவல் நிலையம், இ1 மயிலாப்பூர் காவல் நிலையம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பிற மாநகராட்சி காவல் நிலையங்களில், திருச்சி கன்டோன்மண்ட் காவல் நிலையம் முதல் இடத்திலும் கோவை மாநகரில் இ2 பீளமேடு காவல் நிலையம் 2ஆம் இடத்திலும் உள்ளது. அதேபோல சேலம் சூரமங்கலம் காவல் நிலையம், திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலையம் ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.