சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், 29.01.2022 அன்று காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையாளர் T.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு) அவர்கள் தலைமையில், கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), P.C.தேன்மொழி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), இணை ஆணையாளர் (தலைமையிடம்) B.சாமுண்டீஸ்வரி, இ.கா.ப., காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் S.விமலா (நுண்ணறிவு பிரிவு-1), G.நாகஜோதி, (CCB-I), முனைவர் L.பாலாஜி சரவணன், (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.