தேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்ததை அறிந்த காரைக்குடி விவசாயி இரா.சின்னபெருமாள் அவர்கள் அப்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த எம்.எஸ்.முத்துசாமி IPS அவர்களுக்கு தன் கைப்பட ஒரு பாராட்டு கடிதம் எழுதி அனுப்பினார்.
அந்த பாராட்டு கடிதத்தை பத்திரமாக வைத்திருந்த தற்பொழுது கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் திரு.எம்.எஸ்.முத்துசாமி IPS அவர்கள் தேனி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் உஷா மற்றும் காவலர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த பாராட்டு கடிதத்தை போட்டோ பிரேம் செய்து காவல் நிலையத்திலே மாட்டி வைத்துள்ளார்கள் தேனி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள்…
விவசாயிக்கும் காவல்துறைக்கும் நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் சார்பாக வாழ்த்துகள்…