இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் J.ஜெயபாலாஜி என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் முகுந்த் நாராயணன் என்பவருக்கு கடந்த மாதம் இ-மெயிலில் வந்த NETFLIXஐ இந்த மாதத்திற்குண்டான தொகையை Recharge செய்ய வேண்டும் என்ற வந்த இணைப்பை (Link) தொடர்பு கொண்டு ரூ.600/- செலுத்துவதற்கான இணையவழி வங்கி சேவையில் விவரங்களை பதிவிட்டு, OTP எண்ணை பதிவு செய்தார். ஆனால் அவருடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.600/-க்கு பதிலாக ரூ.1,25,661/- பரிமாற்றம் செய்யப்பட்டது.
பின்னர், மேற்படி இ-மெயிலில் வந்த இணைப்பு போலியானது என்றும், இவர் பதிவிட்ட விவரங்களை கொண்டு, இவரது வங்கி கணக்கிலிருந்து பணம் ரூ.1,25,661/- எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. உடனே, முகுந்த் நாராயணன் இது குறித்து கொடுத்த புகாரின்பேரில், திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அடையாறு சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் J.ஜெயபாலாஜி தீவிர விசாரணை மற்றும் வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டு, சைபர் வழி தொழில்நுட்பங்கள் மூலம் விசாரணை மேற்கொண்டார். அதன்பேரில், புகார்தாரரின் பணம் ரூ.1,25,661/- மீண்டும் அவரது வங்கி கணக்கிற்கு வரவு பெறப்பட்டது.
இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் J.ஜெயபாலாஜி என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 05.03.2022 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.