திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி I.P.S., அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா I.P.S., அவர்களின் அறிவுறுத்தலின்படியும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.கென்னடி, பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன், பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் ராஜேஷ், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பயிற்சி லோகேஸ்வரன் ஆகியோர்களால் 03/03/2022 அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியும், இலவச தொலைபேசி அழைப்பு எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் இணைய தளத்தில் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் அறிமுகமில்லாத நபரின் வீடியோ அழைப்பை எடுக்க கூடாது எனவும், செல்போன்களை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், தவறான பதிவுகளையோ படங்களையோ பகிரவோ, பார்க்கவோ கூடாது எனவும், யாரிடமும் OTP சொல்லக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் குற்றங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற NCRP இணையத்தில் எவ்வாறு புகார் அளிப்பது, என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் பி.பாலசுப்பிரமணியம், முதல்வர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் டி.ஆறுமுகம், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் மற்றும் உட்கோட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.