ஐந்து திருடர்களை அமுக்கிய அதிசயம்
அனைவரும் கோவையிலே காட்டுக்குள்ளே சங்கமம்
பிடிபட்டான் ஒருவன் வேதையிலே வீட்டினிலே
பிடிபடாத நால்வரும் இருக்குமிடம் சொல்லையிலே
குற்றகுழுவோடு சென்றோம் கோவையின் மலைப்பகுதிக்கு
குறிவைத்து பிடித்தோம் அதிகாலை விடிவதற்குள்
இரவில் சுற்றும்போது காவலருக்கு இதய அடைப்பு
இரவிலே அலைந்தோம் மருத்துவமனை உதவிகேட்டு
காவேரி மருத்துவமனைக்கு குறுகிய நேரத்தில் கொண்டுசேர்த்து
காப்பாத்தி உயிர்பித்தோம் நீங்கியது பேராபத்து
மனைவி உறவினர்கள் வந்தவுடன் ஒப்படைத்து
மாட்டிய ஐவருக்கும் பூட்டினோம் கைவிலங்கு
இரவில் ஆயுதங்களோடு வீடுபுகுந்து கொள்ளையடித்தல்
இரண்டுசக்கர வாகனத்தை உடைத்து பகலில் செயின்பறித்தல்
திருச்சி தஞ்சை திருவாரூர் நாகையில்
திருடிய குற்றங்கள் வந்தது விசாரணையில்
ஐவருக்கும் ஒருவருடம் தடுப்புகாவல் சிறைவாசம்
அந்த பகுதிகளில் திடுடில்லை குற்றதடுப்பு காவல்வசம்
– சி.சுபாஷ் சந்திர போஸ்,
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
குற்ற ஆவண பதிவேடு கூடம், தஞ்சாவூர்