கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தை 26.03.2022 அன்று மாலை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இ.கா.ப., ஆகியோர்கள் கூட்டாக திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை காவலர்கள் அணுகவேண்டிய முறை பற்றியும், போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்துமாறும், சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை கையாளுவது குறித்தும், காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு அமரும் இருக்கை, குடிநீர் வசதி மற்றும் வரவேற்புப்பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும், என காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும், காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறியும் ஆய்வினை மேற்கொண்டார்கள்