தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட காவல் உதவி செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் உருவாக்கப்பட்ட ‘காவல் உதவி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சைபர் கிரைம் பிரிவு காவல்துறைஇயக்குநர் அமரேஷ்புஜாரி, மாநிலகுற்ற ஆவணப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் வினித்தேவ் வான்கேடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த செயலியானது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60க்கும்மேற்பட்டசிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி செயலியின் சிறப்பம்சங்கள்:
பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசரகாலங்களில் சிவப்புநிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசரச் சேவை வழங்கப்படும்.
அவசர கால அலைபேசி அழைப்பு வசதி
(Dial-112/100/101)
பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களைத் தெரிவிக்க “Dial-100“ என்றசெயலி ’காவல்உதவி’ ஆப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரிதசேவை வழங்கப்படும்.
இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி
(Location sharing):
பயணங்கள் மேற்கொள்ளும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக பயனாளர்களுக்கு Whatsapp/Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- இதர சேவைகள்:
- காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator)
- காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory))
- இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள்(Cyber Financial Related Complaint)
- இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines)
- அவசரகால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும்வசதி (Alert / Notification messages)
- வாகன விவரம் அறிதல்(Vehicle Verification)
- போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (E-Payment)
- தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services)
- தொலைந்த ஆவணங்கள் குறித்த புகார் (Lost Document Report)
- CSR / FIR குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள்(Social Media Connect)
- காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App)/ 112 இந்தியா (112-India App) ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன் பெறலாம்.
- அலைபேசிவழி / புகார்அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார்கள், முதியோர்கள் ஆகியோர் அவசரகால புகார்களை, படங்கள்/குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம்.
- ‘காவல் உதவி’ செயலியை Google play Store-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுரை:
அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப்பணிகளை ஆற்றிவரும் காவல்துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களையும், தொழில்நுட்ப யுத்திகளையும் தமிழ்நாடுஅரசு செயல்படுத்தி வருகிறது.
காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.