தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையிலான
சரக தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தவவலின்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரே குடும்பம் ஒன்று சேர்ந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து தஞ்சாவூர் சரகமான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்ய வந்த உசிலம்பட்டியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும் சிறையில் அடைத்தனர்.