காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும் வகையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதின் முக்கிய அம்சமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.வி.ஆர்த்தி IAS அவர்களால் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
குற்றப்பின்னணி கொண்ட நபர்களின் முக அம்சங்களும் அடையாளங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அவ்வாறு பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சந்தேகநபர்கள் வந்து செல்லும் பொழுது காவல் துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், மென்பொருளுடன் கூடிய கேமராக்களின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR.M.சுதாகர் அவர்களின் முயற்சியினால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 31 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும், ஒரகடத்தில் 110 கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது இடங்களில் பெண்கள் / குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நடைமுறைபடுத்தபடும் என்பது குறிப்பிடதக்கது.