தஞ்சாவூரை கலக்கி வந்த பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சூரக்கோட்டை ராஜாவை சென்னையில் வைத்து
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப் படை உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார், தலைமை காவலர் உமாசங்கர், தலைமை காவலர் ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருண்மொழி, நவீன், அழகு சுந்தரம் மற்றும் சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை சுற்றி வளைத்து கைது செய்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.