தொடர் – 8 : இன்றைய இளைஞர்களின்
புத்தியும், உத்தியும், சக்தியும்
பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி மத பேதத்தை கடைபிடிக்காமல், கண்மூடித்தனமாக ஜாதி கட்சிகளில் சேராமல்,சண்டை சச்சரவுகளை உண்டாகாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் பொதுநல நோக்கோடு ஜாதி மத பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நற்பணி களையும் நல்ல காரியங்களையும் செய்யலாம்.
- வாலிப வயதில் ஏற்படும் பருவ மாற்றத்தால் தடம் பதிக்கும் வயதில் தடம் மாறாமல் இருக்க பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போகாமலிருக்க மது சிகரெட் மற்றும் போதைப் பொருட்களுக்கு நான் அடிமையாக மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதன்படி நடக்கலாம்.
- எந்த சூழ்நிலையிலும் வாழ்வில் அறம் சார்ந்து அகிம்சையை சார்ந்து மட்டுமே நான் செல்வேன் என்று மனதில் உறுதி ஏற்று அதன்படி அதை நடைமுறைப்படுத்தலாம். மாணவர்கள் ஒன்று சேர்ந்து அகிம்சை வழியில் போராடிய ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டது போல மற்ற பிரச்சனைகளுக்கும் உரிமை குரல் கொடுக்கலாம் அறவழியில் நிற்கலாம் அகிம்சை வழியில் செல்லலாம்.
- ஏழை எளியோர், திறமை இருந்தும் வறுமையில் வாடும் அனைத்து தரப்பு சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முடியாதவர்கள், வயதானவர்கள் போன்ற பிறர் உதவியை நாடி வாழக்கூடிய நலிந்த மக்களுக்கு உதவிகள் செய்ய நற்பணிமன்றம் அமைக்கலாம்.
- கோடையின் போது தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் மழைக்காலத்தின் பொழுது வெள்ள நீரில் பயிர்கள் மூழ்காமல் இருக்க ஊர்கள் தோறும் உள்ள ஏரிகளை குளங்களை குட்டைகளை அகலப்படுத்தலாம் ஆழப்படுத்தலாம், மழை நீர் செல்லும் வழித்தடங்களை கரைகளை பலப்படுத்தலாம் மற்றும் மழைநீர் வடிகால் சேகரிப்பு முறைகளை உண்டாக்கலாம்.
- இன்றைய காலகட்டத்தில் வீடியோ கேம் போன்ற விபரீத விளையாட்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க நேரத்தை விரயமாக்கும் விபரீத விளையாட்டுக்களில் நாட்டம் செலுத்தாமல் பொழுதுபோக்கிற்கு அடிமையாகாமல் மரக்கன்று நடுதல், பனை விதைகளை நடுதல், தோட்ட கலைக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டு கால நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கலாம்.
- தமிழ் மாதங்களை கூட முழுமையாக சொல்லத்தெரியாத தலைமுறையாக இன்றைய தலைமுறை உள்ளது இதை எண்ணி நாம் வேதனைப் படுவதா வெட்கப்படுவதா என்று தெரியவில்லை எனவே இன்றைய இளைஞர்கள் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் தனது இரு கண்களாக மதித்து இரண்டையும் நன்கு கசடற கற்றுக்கொள்ள வேண்டும்.
- இன்றைய காலத்தில் வாழும் இளைஞர்கள் காலையில் கண் விழித்த உடனே அலைபேசியில் கண் விழிக்கிறார்கள் மாலையில் உறங்கும் வேளை இவரை அலைபேசியில் மூழ்கி கிடக்கிறார்கள் எனவே அலைபேசியை அதிகம் பயன்படுத்தாமல் அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் வீர தீர விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் இந்த குர்ஆனோ போன்ற காலகட்டத்தில் எண்ணற்ற இளைஞர்கள் கூட நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
- உற்றார் உறவினர் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பாசத்தை பரிமாற நேசத்தை காட்ட நேரம் ஒதுக்க வேண்டும் பேஸ்புக் வாட்ஸ் அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் மூழ்கி கிடைக்காமல் பந்தபாசம் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் இச்சமூக மேன்மைக்கான பொது நல நோக்கத்தோடு தனது அறிவை ஆற்றலை இச்சமுதாயத்திற்கு இன்றைய இளைஞர்கள் தன்னை முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- அரசு பதவி வகித்த போதும் அமைச்சராக இருந்த பொழுதும் தனக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கரை படியாத கரம் கொண்ட கக்கன் மற்றும் அவரை உருவாக்கிய கர்மவீரர் காமராஜர் போன்ற மிகச்சிறந்த ஆளுமைகளை இன்றைய இளைஞர்கள் கண்டறிய வேண்டும்.
தனது நிஜ கதாநாயகர்களை திரையில் தேடாமல் சைக்கிளின் பின் ஓடாமல் அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று புலம்பி விட்டு, நான் ஆண்ட ஜாதி நீ அடிமை ஜாதி என்று வீர வசனம் பேசிவிட்டு நோட்டாவுக்கு வாக்கு செலுத்தாமல் போலி அரசியல்வாதிகள் எளிதில் வெற்றி பெறுவதற்கு நோட்டோ என்கிற நோ பாலை போடாமல் உண்மையான சமூக அக்கறையுள்ள சமூக மேன்மைக்கு பாடுபடும் நபர்களுக்கு தனது வாக்கை செலுத்த வேண்டும் அடுத்த காமராஜர் அடுத்த கக்கன் யார் என்பதை இன்றைய இளைஞர்கள் தனது செயலால் சிந்தித்து ஒன்றுசேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
முடிவுரை: –
ஒரு வனத்துக்குள் சுவாமி விவேகானந்தர் அவர்கள் தன்னன் தனியாக பயணப்பட வேண்டிய சூழல் அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழலில் அவரை துரத்துகின்றன சில ஓநாய்கள்.
சிறிது தூரம் அஞ்சி ஓடியவர் ஒரு கட்டத்தில் நின்று நிதானித்து திரும்புகிறார். ஓடுவதால் இனி பயனில்லை என்று முடிவு கொண்டு மன தைரியத்துடன் துணிச்சலாக ஓநாய்களை எதிர்த்து நிற்க விரட்டி வந்த ஓநாய்கள் மிரண்டோடி விடுகின்றன.
இந்த அனுபவத்தை அவர் இளைஞர்களுக்கு வடிவப்படுத்தும் விதமே அவரது தனித்துவமாகிறது. வாழ்வில் பிரச்சினைகள் உன்னை துரத்தும். நின்று உறுதியோடு திரும்பி பிரச்சினையை எதிர்கொள்ள தயாரானால் பிரச்சினைகள் உன்னைக்கண்டு பின்வாங்கும் என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர் அவர்கள். இந்த ஓநாய் துரத்தும் நிகழ்வானது நம் வாழ்வில் அனைத்து விதமான வாழ்வியல் நிகழ்வுகளுக்கும் கனகச்சிதமாக பொருந்தக்கூடிய நிகழ்வாகும்.
தனது புத்தகத்தை அடகு வைத்து படிக்கின்ற இக்கட்டான சூழ்நிலை உண்டான போதும் கடைசிவரை மனம் தளராமல் போராடி அக்னிச் சிறகு விரித்த அப்துல் கலாம் ஐயா அவர்கள்
எதிர்காலம் சிறக்க இன்றைய இளைஞர்கள் கனவு காண வேண்டும் எனக் கூறிய கற்பக விருட்சம் ஆவார்.
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள்.. வாழ்க்கை என்பது கடமை நிறைவேற்றுங்கள்.. வாழ்க்கை என்பது ஒரு இலட்சியம் சாதியுங்கள்… வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் வென்று காட்டுங்கள் என அவர் கூறிய பொன்மொழிகளுக்கிணங்க வாழ்க்கையை ஒவ்வொரு இளைஞர்களும் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்போது தான் இந்திய நாடு வளம் பெறும்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே, பாரத கலாச்சாரம். இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக இன்றைய இளைஞர்களின் புத்தியும் உத்தியும் சக்தியும் பகலில் எரியும் விளக்காக கடலில் பெய்கின்ற மழையாக எதற்குமே பயன்படாத காட்டாற்று வெள்ளமாக இல்லாமல் இரவில் எரிகின்ற விளக்காகவும், நஞ்சை நிலத்தில் பெய்கின்ற மழையாகவும், இரு கரைகளில் அடங்கி ஓடி அணையில் தேங்கி பயன்தரக்கூடிய ஆற்று நீராகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.
வீரத்துறவி விவேகானந்தர் மற்றும் அக்னி நாயகன் அப்துல்கலாம் ஆகியோரின் கனவு நனவாக அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் அதற்கு இன்றைய இளைஞர்கள் முன் வரவேண்டும்.!.