நெல்ல ஊறவச்சி நெருப்புல அவியவச்சி
நெடுநேரம் காயவச்சி நடுவீட்ல குழிபறிச்சி
ஊருசனம் உலக்கையால் குத்திய புழுங்கரிசி
உமியெல்லாம் முறத்தாலே புடைச்சு அரிசபிரிச்சி
காத்துவாங்கும் கீத்துகூரை கவலையில்லா கிராமத்துக்குள்ள
கிழவன் கிழவி முணுமுணுத்து கல்லெடுக்கும் அரிசிக்குள்ள
வளர்த்துவரும் சேவல்கோழி உரிமையோடு கொத்திதிங்க
வடிச்சிவச்ச கஞ்சிதண்ணி உடம்புவலிக்கு ஊத்திகுடிக்க
கடனில்ல காசில்ல மனசுக்குள்ள ஆசையில்ல
கஷ்டப்பட்டு உழச்சதாலே உடம்புக்குள்ள வியாதியில்ல
நட்டுவச்ச பயிர்களெல்லாம் விளஞ்சிருக்கு வயலுக்குள்ள
நட்டவனுக்கு கொடுத்தாச்சு உழுதவனுக்கு நட்டமில்ல
ஓலக்குடிசையில ஒளிஞ்சிருக்கும் ஓராயிரம் ஓட்டைகள்
ஒழுகிடும் மேகநீரை தாங்கிடும் தட்டுகள்
இயற்கையின் சீற்றத்தால் ஏழைகளின் சிரமங்கள்
இதயங்களை அமைதியாக்கி வாழ்ந்திடும் கிராமங்கள்